- Advertisement -
Homeகிரிக்கெட்141 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து. பேட்டை உதறிவிட்டு அப்படியே நிலைகுலைந்த லாபுஷேன்.

141 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து. பேட்டை உதறிவிட்டு அப்படியே நிலைகுலைந்த லாபுஷேன்.

-Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ஆம் தேதியான இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைக் தொட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஜூன் 7-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

அதன்படி இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியானது இதுவரை இரண்டாவது ஸ்டேஷனில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தப் போட்டியின் போது முதல் விக்கெட்டை எந்த பந்துவீச்சாளர் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 10 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் இருந்த உஸ்மான் கவாஜாவை இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளரான சிராஜ் போட்டியின் எட்டாவது ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.

அதற்கு முன்னதாக இரண்டு மெய்டன் ஓவர்களை வீசிய அவர் கவாஜாவை ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேற்றினார். அதன் பின்னர் மூன்றாவது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லாபுஷேன் பேட்டிங் செய்கையில் தனது அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்திய சிராஜ் 141 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய ஒரு பந்தில் அவரை காயமடையும் வைத்தார்.

-Advertisement-

அப்படி இடது கையில் காயமடைந்த லாபுஷேன் வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் 141 கிலோமீட்டர் வேகத்தில் ஷார்ட் பிட்ச் பந்தாக வீசிய சிராஜ் லாபுஷேனை நிலைகுலைய வைத்தார். அந்த பந்தினை எதிர்கொண்ட அவரும் சரியாக கணிக்க முடியாமல் தனது விரலில் அடி வாங்கி பேட்டை கீழே விட்டு வலியால் துடித்தார்.

இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்