- Advertisement -
Homeகிரிக்கெட்அந்த 3 ஓவர்.. இம்பாக்ட் பிளாயர் விதியால தான்.. தோல்வியின் காரணங்களை அடுக்கி தள்ளிய கில்..

அந்த 3 ஓவர்.. இம்பாக்ட் பிளாயர் விதியால தான்.. தோல்வியின் காரணங்களை அடுக்கி தள்ளிய கில்..

-Advertisement-

நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரு அணி எத்தனை ரன்கள் அடித்தாலும் இரண்டாவது பந்து வீசும் போது எதிரணி ஜெயித்து விடுவார்கள் என்ற பதட்டத்தில் தான் செயல்பட வேண்டிய ஒரு சூழல் உள்ளது. அந்த வகையிலான ஒரு போட்டியாகவும் தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் சமீபத்தில் மோதிய போட்டியும் அமைந்திருந்தது.

இந்த போட்டிக்கு முன்மாதிரி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதி இருந்த சூழலில் 211 இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அதனை மிக எளிதாக எட்டிப் பிடித்திருந்தது. அப்படி இருக்கையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 224 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவரில் ஏறக்குறைய நூறு ரன்களை குவித்திருந்த டெல்லி அணி மிக சவாலான ஒரு ஸ்கோரையும் எட்டி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த குஜராத் அணியில் மூன்றாவது வீரராக உள்ளே வந்த சாய் சுதர்சன் 65 ரன்கள் எடுத்த அவுட்டாக, குஜராத்தின் ரன் ரேட்டும் அதிகமாக இருந்தது. மேலும், கடைசி கட்டத்தில் மில்லர் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட்டாக கடைசி இரண்டு ஓவர்களில் 37 ரன்கள் வேண்டும் என்ற நிலையும் குஜராத் அணிக்கு அமைந்திருந்தது.

இதனால் குஜராத் அணிக்காக ரஷீத் கான் மற்றும் சாய் கிஷோர் போராடிய நிலையிலும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் அவர்கள் தோல்வி அடைய நேரிட்டது. கடைசி ரெண்டு பந்தில் 11 ரன்கள் வேண்டும் என இருந்த போது முதல் பந்தை சிக்சர் அடித்திருந்த ரஷீத் கான், அடுத்த பந்தை டாட் செய்ததால் தோல்வியை சந்தித்திருந்தனர்.

-Advertisement-

முந்தைய சீசன்களை போல இந்த முறை குஜராத் அணிக்கு நல்லதொரு சீசனாக அமையாத சூழலில் இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த கேப்டன் சுப்மன் கில், “நாங்கள் நால்லதொரு கிரிக்கெட்டை ஆடினோம் என்று தான் நினைக்கிறேன். கடைசியில் தோற்றது ஏமாற்றமாக இருந்தாலும் அனைவருமே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

கடைசி வரை சண்டை போட்டதுடன் எந்த இடத்திலும் நாங்கள் தோல்வி அடைவோம் என்ற நோக்கத்தில் ஆடவில்லை. 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடும் போது, திட்டத்தை பற்றி பேசி எந்த பலனும் இல்லை. உள்ளே போய் ரன் அடிக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அணிகள் அதிக ரன்கள் அடிப்பதில் இம்பேக்ட் பிளாயர் விதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

நிறைய விக்கெட்டுகள் சென்றாலும் கடைசியில் கூட பேட்ஸ்மேன்கள் வந்து ஆட வழி செய்கிறது. 200 ரன்களில் கட்டுப்படுத்த வேண்டுமென நினைத்து கடைசி 3 ஓவர்களில் ரன்களை அதிகமாக வழங்கி விட்டோம். இது போன்ற பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் சேர்த்தால் நீங்கள் உங்களின் திட்டங்களை சரியாக வகுக்க வேண்டும்” என கில் கூறினார்.

-Advertisement-

சற்று முன்