- Advertisement -
Homeகிரிக்கெட்மருத்துவமனையில் தாயார்... இக்கட்டான சூழ்நிலை... இறுதிப்போட்டியில் பாசப்போராட்டம்.. அணிதான் முக்கியம் என்று நின்ற ஷமி

மருத்துவமனையில் தாயார்… இக்கட்டான சூழ்நிலை… இறுதிப்போட்டியில் பாசப்போராட்டம்.. அணிதான் முக்கியம் என்று நின்ற ஷமி

-Advertisement-

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தார். இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் விளையாடி வந்த வேளையில் முதல் சில போட்டிகளில் முகமது ஷமிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. திறமை இருந்தும் அவர் பெனச்சில் அமர்ந்திருந்தது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஹார்திக் பாண்டியா காயம் அடைந்து வெளியேறியதாலும், ஷர்துல் தாகூர் ஃபார்ம் அவுட் ஆனதனாலும் தனது இடத்தினை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது பிடித்த முகமது ஷமி அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு போட்டிக்கு போட்டி விக்கெட்டுகளை அள்ளி இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியின் போது ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனையையும் நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் 7 ஓவர்கள் வீசி 1 மெய்டன் உட்பட 47 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

இந்த இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள வேலையில் ஒரு கடினமான சூழலில் தான் முகமது ஷமி இந்த இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் முகமது ஷமியின் அம்மா அஞ்சும் ஆரா என்பவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நவம்பர் 19-ஆம் தேதி உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக ஒரு இக்கட்டான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

-Advertisement-

அவரது இந்த உடல்நிலை குறித்த தகவல் முகமது ஷமிக்கும் எட்டி இருக்கிறது. இருப்பினும் அணியின் வெற்றி தான் முக்கியம் என்று இறுதிப் போட்டியில் முகமது ஷமி பங்கேற்று விளையாடி இருந்தார். தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இக்கட்டான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தும் அவர் நாட்டுக்காக விளையாடி உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ஷமியின் தாயாறது உடல்நிலை தற்போது மெல்ல மெல்ல தேறி நல்ல நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த இறுதி போட்டிக்கு முன்னதாக ஒரு கருத்தினை தெரிவித்திருந்த முகமது ஷமியின் தாயார் அவர்கள் : முகமது ஷமிக்கு என்னுடைய பிரார்த்தனைகள் அவருடன் இருக்கும். நிச்சயம் அவர் இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுப்பார் என்றும் வெற்றிகரமாக கோப்பையுடன் வீடு திரும்புவார் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உலககோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்