- Advertisement -
Homeகிரிக்கெட்டிவில்லியர்ஸ், சூர்யகுமாரை மிஞ்சிய தோனி 360.. ஒரே சிக்ஸரில் மெய்சிலிர்த்த ரசிகர்கள்..

டிவில்லியர்ஸ், சூர்யகுமாரை மிஞ்சிய தோனி 360.. ஒரே சிக்ஸரில் மெய்சிலிர்த்த ரசிகர்கள்..

-Advertisement-

ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக கேப்டன் பதவியை துறந்திருந்த தோனி, அந்த பொறுப்பை இளம் வீரர் ருத்துராஜ் கையில் கொடுத்து அவரை சிறந்த வழியிலும் வழி நடத்தி வருகிறார். கேப்டன்சி பதவியை திறப்பதாக தோனி எடுத்த முடிவு ஆரம்பத்தில் விமர்சனத்தை சந்தித்திருந்தாலும், சிஎஸ்கே அணியை மிகக் கூலாக முதல் பாதியில் தோனியை போலவே ருத்துராஜும் வழிநடத்தி வருவதால் அவரை வெகுவாக பாராட்டவும் தொடங்கி விட்டனர்.

இன்னொரு பக்கம் கேப்டன்சி உள்ளிட்ட நெருக்கடி இல்லாமல் இருக்கும் தோனி, பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். ஐபிஎல் வரலாற்றிலேயே இருபதாவது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையுடன் விளங்கிவரும் தோனி, அதனை யாரும் நெருங்க முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 20 வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த தோனி, லக்னோ அணிக்கு எதிராக தற்போது நடந்த போட்டியிலும் கடைசி ஓவருடன் சேர்த்து மொத்தம் இரண்டு சிக்ஸர்களை அடித்திருந்தார். தோனியின் இந்த அதிரடி தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனுடன் அவர் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறக்கூடாது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதே போல, 42 வயதிலும் இப்படி ஒரு ஆட்டத்தை ஆடுவதால் இன்னும் சில ஐபிஎல் சீசன்கள் தொடர்ந்து ஆட வேண்டும் என்பதும் ரசிகர்கள் விருப்பமாக உள்ளது. முன்பெல்லாம் தோனி அதிரடியான ஆட்டத்தை கையில் எடுக்கும் போது அவரது ஷாட்டுகள் எல்லாம் ஆக்ரோஷமாக தான் இருக்கும்.

-Advertisement-

ஆனால் இந்த சீசனில் ஆக்ரோஷமாக இருக்கும் அதே வேளையில் மிக நேர்த்தியான ஒரு பேட்ஸ்மேன் ஷாட்டாகவும் இருந்து வருகிறது. ஃபீல்டர்கள் இல்லாத கேப் நடுவே மிக அழகாக டைமிங்குடன் ஃபோர் மற்றும் சிக்ஸர்கள் அடிக்கும் தோனி, லக்னோவுக்கு எதிரான போட்டியில், அடித்த ஒரு சிக்ஸர் தான் இப்போது ஹாட் டாபிக்காக உள்ளது.

19 வது ஓவரை மோஷின் கான் வீசியிருந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட தோனி, ஸ்டம்பிலிருந்து ஆப்சைட் வெளியே வந்து ஏறக்குறைய 360 டிகிரியில் ஒரு ஸ்கூப் சாட்டை சிக்ஸராக மாற்றி இருந்தார். பொதுவாக இதுபோன்ற ஷாட்களை டிவில்லியர்ஸ் மற்றும் சூர்யகுமார் அதிகமாக அடிக்கும் நிலையில் 42 வயதில், அவர்களுக்கே டஃப் கொடுக்கும் ஷாட்டை தோனி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்