- Advertisement -
Homeகிரிக்கெட்தோனியின் பலவருட சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ். ஒரு கேப்டனா சிறப்பான சாதனை தான்

தோனியின் பலவருட சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ். ஒரு கேப்டனா சிறப்பான சாதனை தான்

-Advertisement-

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது கடந்த ஜூலை 6-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்று இத்தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆசஷ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து விளையாடி இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் ஒரு சாதனையை முறியடித்துள்ளது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட ரன்களை தோனி தலைமையிலான இந்திய அணி நான்கு முறை வெற்றிகரமாக சேசிங் செய்து 250-க்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையை தோனி தன் கைவசம் வைத்திருந்தார்.

-Advertisement-

இந்நிலையில் ஜோ ரூட்டிற்கு அடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் “பேஸ்பால்” முறையை கையில் எடுத்து அதிரடியாக வெற்றிகளை குவித்து வரும் வேளையில் தற்போது ஐந்தாவது முறையாக 250-க்கும் மேற்பட்ட இலக்கினை வெற்றிகரமாக சேசிங் செய்து அதிக முறை 250-க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் கைகோர்த்த பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான அணுகுமுறையை கையிலெடுத்த இங்கிலாந்து அணி வெற்றியை மட்டுமே குறிவைத்து தொடர்ச்சியாக தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்த வேளையில் தற்போது இந்த தொடரில் அவர்கள் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்