- Advertisement -
Homeகிரிக்கெட்மேட்ச் தோத்தாலும் இந்த விஷயத்தை நெனச்சு பெருமையா இருக்கு.. உற்சாகமா பேசிய பேட் கம்மின்ஸ்..

மேட்ச் தோத்தாலும் இந்த விஷயத்தை நெனச்சு பெருமையா இருக்கு.. உற்சாகமா பேசிய பேட் கம்மின்ஸ்..

-Advertisement-

2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் அதன் பின்னர் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே கடினமாக தான் இருந்து வருகிறது. கடந்த சீசனிலும் அவர்கள் பெரிய அளவில் சொதப்பி இருந்தனர். ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த மார்க்ரம் ஐபிஎல் தொடரை போல தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இரண்டு முறை நடந்து முடிந்த SA 20 லீக் தொடரில் இரண்டு முறையும் சன்ரைசர்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பை கைப்பற்ற உதவியிருந்தார்.

ஆனால் அவரது மேஜிக் ஐபிஎல் தொடரில் கைகூடாமல் போனதால் அதிக விமர்சனத்தையும் சந்தித்திருந்தார். இதற்கிடையில் 20 கோடி ரூபாய் செலவு செய்து பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்திருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அதுமட்டுமில்லாமல் அவரை புதிய கேப்டனாகவும் அவர்கள் நியமித்ததும் கிரிக்கெட் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

SA 20 தொடரில் சிறப்பான கேப்டனாக மார்க்ரம் இருக்கையில் பேட் கம்மின்ஸை ஏன் கேப்டனாக அறிவிக்க வேண்டும் என ஒரு பக்கமும் ஆஸ்திரேலியாவுக்காக கடந்த ஆண்டு இரண்டு முறை உலக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் பேட் கம்மின்ஸ் மார்க்ரமை விட சிறந்த கேப்டன் என இன்னொரு பக்கமும் ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

சர்வதேச அளவில் பேட் கம்மின்ஸ் கேப்டன்சி வேலை செய்திருந்தாலும் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக எந்த அளவுக்கு அது முக்கியமாக இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறி தான். அப்படி ஒரு சூழலில் தான் கொல்கத்தா அணியை எதிர்த்து 17 வது சீசனின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணி ஆடி இருந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 208 ரன்கள் எடுக்க இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத்தும் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் இலக்கு அதிகம் என்பதால், அவர்களை சுற்றி நெருக்கடியும் உருவானது. இதனால், ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கும் வாய்ப்பையும் அவர்கள் இழந்து விட்டனர்.

-Advertisement-

கடைசி மூன்று ஓவர்களில் 60 ரன்கள் வேணும் என்ற நிலையில் க்ளாஸன் போராடிய போதும் கடைசி பந்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி. ஏறக்குறைய தோல்வியின் பிடியில் இருந்து வெற்றி பாதைக்கு சென்று கடைசி பந்தில் தோல்வி அடைந்தது பற்றி பேசி இருந்த ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ், “மிகவும் நெருங்கி வந்த அற்புதமான ஒரு போட்டி. எதிர்பாராத விதமாக எங்கள் பக்கம் செல்லவில்லை. நாங்கள் பெரும்பாலான நேரத்தில் சிறப்பாக பந்து வீசினோம். ஆனால் கடைசி கட்டத்தில் ரசல் என்ன செய்ய வேண்டுமோ அதனை அவரது அணிக்காக செய்தார்.

எங்கள் திட்டத்தை சரியாக வகுத்து அதை முயற்சி செய்ய பார்த்தோம் என்றே கருதுகிறேன். ரசலை போல ஒருவருக்கு கடைசி கட்டத்தில் பந்து வீசுவதே கடினமான காரியம் தான். க்ளாஸன் மற்றும் ஷபாஸ் அகமது போட்டியை எங்கள் பக்கம் திருப்பி இருந்தனர். நாங்கள் இப்படி நெருங்குவோம் என யார் நினைத்தார்கள். நாங்கள் தோல்வி அடைந்தாலும் எதிரணியினரின் ஹோம் மைதானத்தில் சிறப்பாக ஆடி உள்ளோம் என்றே நினைக்கிறேன். இன்னும் ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என பேட் கம்மின்ஸ் கூறி உள்ளார்.

-Advertisement-

சற்று முன்