- Advertisement -
Homeகிரிக்கெட்கடைசி ஓவர் வரை த்ரில்.. வீணாய் போன இளம் வீரரின் அதிரடி ஆட்டம்.. ரிஷப் பந்த்திற்கு...

கடைசி ஓவர் வரை த்ரில்.. வீணாய் போன இளம் வீரரின் அதிரடி ஆட்டம்.. ரிஷப் பந்த்திற்கு வந்த சோதனை..

-Advertisement-

ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மோதி இருந்த நிலையில் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஒரு பக்கம் டெல்லி அணி தங்களின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.

தங்களின் வெற்றியை தொடர ராஜஸ்தான் அணியும், முதல் வெற்றியை பெற இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மல்லு கட்டியதால் பரபரப்பாகவே இருந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்திருந்தனர்.

ஜெய்ஸ்வால் ஐந்து ரன்களிலும், பட்லர் 11 ரன்களிலும் அவுட்டாக, 36 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது. அந்த சமயத்தில் யாருமே எதிர்பாராதவிதமாக ஐந்தாவது வீரராக உள்ளே வந்த அஸ்வின், தான் சந்தித்த 19 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 29 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இதற்கு மத்தியில் முந்தைய போட்டியை போல இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இளம் வீரர் ரியான் பராக், 45 பந்துகளில் ஏழு ஃபோர்கள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் எடுத்திருந்தார். அதிலும் நோர்ஜே வீசிய 20 வது ஓவரில் மொத்தம் 25 ரன்களை அவர் சேர்த்து டெல்லி அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி இருந்தார்.

-Advertisement-

ரியான் பராக் அதிரடியால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. ஒரு கட்டத்தில் 150 ரன்கள் தொடுவார்களா என்று சந்தேகம் இருந்த நிலையில் பராகின் ஆட்டம், அனைத்தையும் தலைக்கீழாக மாற்றியது. இதனைத் தொடர்ந்து தங்களின் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில், மிட்சல் மார்ஷ் மற்றும் ரிக்கி பூய் ஆகியோர், அடுத்தடுத்து அவுட்டானாலும் தொடக்க வீரர் வார்னர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார்.

ஒரு கட்டத்தில் அவரும் 49 ரன்களில் அவுட்டாக, பின்னர் ரிஷப் பந்த்தும் 28 ரன்களில் நடையைக் கட்ட, கடைசி 4 ஓவர்களில் டெல்லியின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ரிஷப் பந்த்தும் 28 ரன்களில் நடையைக் கட்ட, கடைசி 4 ஓவர்களில் டெல்லியின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அப்படி இருந்தும் ஸ்டப்ஸ் காட்டிய அதிரடியால் டெல்லியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது.

இதனால், கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை ஆவேஷ் கான் வீசி இருந்தார். 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டதால், ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தங்களின் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த சீசனில் நடந்த 9 போட்டிகளிலும் ஹோம் கிரவுண்ட் மைந்தர்கள் தான் வெற்றி கண்டிருந்தனர்.

-Advertisement-

சற்று முன்