- Advertisement -
Homeகிரிக்கெட்இத்தனை நாள் கழிச்சு ஆட வந்ததும்.. மேட்ச் தோத்தாலும் ரிஷப் பந்த் சொன்ன வார்த்தை..

இத்தனை நாள் கழிச்சு ஆட வந்ததும்.. மேட்ச் தோத்தாலும் ரிஷப் பந்த் சொன்ன வார்த்தை..

-Advertisement-

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ரிஷப் பந்தின் வருகைக்காக ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் தோல்வியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் தொடங்கி இருந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக தான் அமைந்துள்ளது. இந்திய அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் என இளம் வயதிலேயே பெயர் எடுத்த ரிஷப் பந்த், டெல்லி அணியின் கேப்டன் ஆகவும் 2022 ஆம் ஆண்டு ஆடி இருந்தார். 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க சில மாதங்களுக்கு முன்பாக யாரும் எதிர்பாராத விதமாக ஒரு கார் விபத்தில் சிக்கியதுடன் மிகப் பெரிய அளவில் அவருக்கு உடல் சேதமும் ஏற்பட்டிருந்தது.

இதனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்காத ரிஷப் பந்த், எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாமல் இருந்து வந்தார். அது மட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னுடைய உடல்நலம் குறித்த அப்டேட்டுகளையும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து வந்த ரிஷப் பந்த், ஒரு மாதத்திற்கு முன்பாக ஓரளவுக்கு உடல் தகுதி பெற்று கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடவும் ஆரம்பித்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கியிருந்த ரிஷப் பந்த், பேட்டிங் ஆட வந்தபோது மைதானத்திலிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று சிறப்பான வரவேற்பையும் கொடுத்திருந்தனர். அவர் 13 பந்துகளில் இரண்டு ஃபோர்களுடன் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனாலும் அவர் பேட்டிங் ஆட ஆரம்பித்துள்ளதே ரசிகர்களுக்கு போதும் என்ற நிலை தான் இருந்தது.

டெல்லி அணி 174 ரன்களை எடுக்க தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி கடைசி ஓவரில் வெற்றி பெறவும் செய்திருந்தது. இந்த போட்டியில் சில விஷயங்கள் சாதகமாக டெல்லி பக்கம் இல்லாமல் போக, அதன் காரணமாக அவர்கள் தோல்வியை தழுவவும் நேரிட்டது. அதே வேளையில் ரிஷப் பந்த் மீண்டு வந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ளது ஒரு வேதனையான தருணமாக தான் பார்க்கப்படுகிறது.

-Advertisement-

ஆனாலும் இனி வரும் போட்டிகளில் தனது பேட்டிங்கில் மேம்பட்டு நிச்சயம் டெல்லி அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றிகளை குவிப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இதனிடையே போட்டி முடிந்த பின்னர் பேசி இருந்த கேப்டன் ரிஷப் பந்த், “இஷாந்தின் காயம் ஃபீல்டிங்கின் போது தெளிவாக தெரிந்தது. இதனால் எங்களுடைய ஒரு பந்து வீச்சாளர் குறையும் உருவானது. அபிஷேக் போரேல் சிறப்பாக ஆடி அதிக ரன்கள் சேர்க்கவும் உதவி செய்திருந்தார். இனி வரும் போட்டிகளில் இன்னும் நிறைய பங்களிப்பை அணிக்காக அபிஷேக் அளிப்பார் என நினைக்கிறேன்.

அணி வீரர்களும் எங்கள் பக்கம் போட்டியை திருப்ப நிறைய முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டனர். மேலும் இத்தனை நாட்கள் கழித்து நான் திரும்ப ஆட வந்தது கொஞ்சம் பதற்றமாக தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல ரசித்து ஆட தொடங்கினேன். ஒரு பந்து வீச்சாளர் இல்லாமல் போனாலும் எங்கள் தவறை நான் மூடி மறைக்க விரும்பவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக ஆடினர்” என ரிஷப் பந்த் குறிப்பிட்டுள்ளார்.

-Advertisement-

சற்று முன்