- Advertisement -
Homeகிரிக்கெட்அந்த விஷயம் மும்பைக்கு ஈஸியா இருந்தும் தோத்துட்டாங்க.. எனக்கு ஆட்ட நாயகன் கிடைச்சது.. மனம்திறந்த சுதர்சன்..

அந்த விஷயம் மும்பைக்கு ஈஸியா இருந்தும் தோத்துட்டாங்க.. எனக்கு ஆட்ட நாயகன் கிடைச்சது.. மனம்திறந்த சுதர்சன்..

-Advertisement-

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை நடந்த பல போட்டிகளில் அனைத்து அணிகளும் 170 ரன்களுக்கு மேல் அடித்திருந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய போட்டியில் இரு அணிகளும் 170 ரன்களுக்கும் குறைவாக தான் எடுத்திருந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்திருந்தார்.

அதன்படி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிக நிதானமாகவே ரன் சேர்க்கவும் தொடங்கினர். கேப்டன் கில் 31 ரன்கள் எடுத்து அவுட்டாக அதன் பின்னர் வந்த சாய் சுதர்சன், நிதானமாக ஆடி 45 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் வந்த வீரர்களும் பெரிதாக ரன் சேர்க்காததால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தது. அதுமட்டுமில்லாமல் டியூ பேக்ட்ரும் அவர்களுக்கு சாதகமாக இருந்ததால் மும்பை அணி இறுதியில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். கடைசி ஐந்து ஓவர்களில் 42 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் குஜராத் அணியில் உள்ள மோகித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன், ரஷீத் கான் என அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெறவும் உதவி செய்திருந்தனர்.

இந்த ஐபிஎல் தொடரில் இளம் கேப்டனாக இருக்கும் கில், தனது முதல் போட்டியிலேயே குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றி பெற வைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. குஜராத் அணியில் நிறைய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியிருந்தும் ஆட்டநாயகன் விருது சாய் சுதர்சனுக்கு கிடைத்திருந்தது.

-Advertisement-

தொடர்ந்து போட்டி வென்று பின் பேசிய சாய் சுதர்சன் இது பற்றி பேசுகையில், “முதல் இன்னிங்ஸில் சில ஷார்ட்களை அடிக்கவே மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் டியூ காரணமாக அது எளிதாக இருந்த போதும் மும்பை அணியால் அந்த ஷாட்களை அடிக்க முடியாமல் போக எங்களது பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். நான் இந்த போட்டியை எனது அணிக்காக ஒரு வெற்றியை பெற்றுக் கொடுக்க ஒரு அதிக வாய்ப்பாக பார்க்கிறேன்.

முதலில் சில பந்துகள் பேட்டிங் செய்த பிறகு இந்த மைதானத்தில் நீங்கள் கடினமாக ஆடி அதே வேகத்தை தொடர வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன். நாங்கள் பந்து வீசும் போது பலரும் சிறப்பான பங்களிப்பை அளித்த போதிலும் எனக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது சற்று அதிர்ச்சியாக தான் இருக்கிறது. பந்தின் வேகத்தை குறைத்து போட்டியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் திட்டமாக இருந்தது” என சாய் சுதர்சன் கூறினார்.

-Advertisement-

சற்று முன்