- Advertisement -
Homeகிரிக்கெட்சிஎஸ்கே, ஆர்சிபி நெனச்சா கூட முடியாது போல.. காத்திருக்கும் பெரிய சவால்.. ஐபிஎல் 2024 ரகசியத்தை...

சிஎஸ்கே, ஆர்சிபி நெனச்சா கூட முடியாது போல.. காத்திருக்கும் பெரிய சவால்.. ஐபிஎல் 2024 ரகசியத்தை உடைத்த தவான்..

-Advertisement-

இந்திய அணியில் தற்போது இளம் வீரர்கள் அதிகமாக ஆடி வருவதால் பல சீனியர்களுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. அதில் முக்கியமான ஒருவர் தான் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான். சுப்மன் கில், இஷான் கிஷான், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் இந்திய அணியில் தொடக்க வீரர்களாகவும் களமிறங்கி சிறப்பாக ஆடி வந்ததால் தவானுக்கான வாய்ப்பு இந்திய அணியில் மங்கி போனது.

இதனால் ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் தான் அவர் ஆடுவதையும் பார்க்க முடிகிறது. 50 ஓவர் போட்டியில் இந்திய அணி கண்ட மிகச் சிறப்பான தொடக்க வீரராக தவான் இருந்த போதிலும் மற்ற வீரர்களின் வருகையால் அவரது வாய்ப்பு பறிபோனது.

இதனிடையே தற்போது 17 வது ஐபிஎல் சீசன் ஆரம்பமாகி உள்ள நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஷிகர் தவான், தங்களின் முதல் போட்டியையே வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 174 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியில் சாம் குர்ரான் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் உதவியுடன் கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது. தொடக்க வீரராக இறங்கி நான்கு ஃபோர்களுடன் 22 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார் தவான்.

-Advertisement-

முந்தைய பல சீசன்களைப் போல முதல் போட்டியை வெற்றிகரமாக தொடங்கி உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் போட்டிக்கு பின்னர் பேசுகையில், “இது மிகவும் சிறப்பான தருணமாக உள்ளது. மேலும் மைதானத்தில் இருந்தது மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு மீண்டும் ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆடுவதால் பதற்றமாக தான் இருந்தது. நாங்கள் சில இடங்களில் நிறைய ரன்களை கொடுத்தோம் என்பது உண்மை தான். முதல் போட்டி என்பதால் கொஞ்சம் பதற்றம் இருக்க தான் செய்யும்.

இருட்ட ஆரம்பித்த பின்னர், பிட்ச்சும் எங்களுக்கு சாதகமாக மாறியது. சாம் குர்ரான் அற்புதமான இன்னிங்சை ஆட, அதனை லிவிங்ஸ்டன் சிறப்பாக முடித்து வைத்தார். இது புதிய மைதானம் என்பதால் இதை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அதனால், இரவு பகல் என அனைத்து நேரங்களிலும் பயிற்சியை மேற்கொண்டோம். மற்ற அணிகளும் தங்கள் மூளைகளை பயன்படுத்தி இங்கே எப்படி ஆட வேண்டும் என தெரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்” என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

சண்டிகர் மைதானம் புதிய மைதானம் என்பதால் மும்பை, சிஎஸ்கே, ஆர்சிபி என எந்த பெரிய அணியாக இருந்தாலும் அவர்கள் இங்கே பஞ்சாப்பை எதிர்த்து ஆடுவது சவாலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

-Advertisement-

சற்று முன்