- Advertisement -
Homeகிரிக்கெட்ஒர்க் அவுட் ஆகாமல் போன ரிஷப் பந்த் கம்பேக்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் உதவியால் மாஸ்...

ஒர்க் அவுட் ஆகாமல் போன ரிஷப் பந்த் கம்பேக்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் உதவியால் மாஸ் காட்டிய பஞ்சாப்

-Advertisement-

17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி, விறுவிறுப்பாக நடந்து முடிந்ததையடுத்து சிஎஸ்கே அணி, ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிகரமாக இந்த தொடரை தொடங்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள், சண்டிகர் மைதானத்தில் மோதி இருந்தன. இந்த போட்டியில், ரசிகர்களை பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருந்த விஷயம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் கம்பேக் கொடுத்தது தான்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி அதிகம் காயம் அடைந்திருந்த ரிஷப் பந்த், ஏறக்குறைய உயிர் பிழைத்து திரும்ப வந்ததுடன் இத்தனை நாட்கள் முழு ஓய்வில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக முழுமையாக உடற்தகுதியும் பெற்றிருந்தார்.

அத்துடன் அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக திரும்பி வருவார் என்பதும் சமீபத்தில் உறுதியாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என களமிறங்க வந்த ரிஷப் பந்த்திற்காக ரசிகர்கள் பலரும் பெரிதும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் அவர்களால் தொடர்ந்து பெரிய அளவில் ரன் எடுக்க முடியாததன் காரணமாக அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. கடைசி கட்டத்தில் டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள அபிஷேக் போரல் 10 பந்துகளின் 32 ரன்கள் சேர்த்ததால் அந்த அணி 20 அவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த், 13 பந்துகளில் 2 ஃபோர்களுடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

-Advertisement-

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியும் முதலில் இருந்தே பவுண்டரிகள் பறக்க விட்டிருந்தாலும் சிறிய இடைவேளையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. பத்து ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை அவர்கள் எடுத்திருந்ததால் கடைசி பத்து ஓவர்களில் 88 ரன்கள் தேவை என்ற நிலையும் உருவாகி இருந்தது.

இதனால் போட்டியும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் கடைசி கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர்களான சாம் குர்ரான் மற்றும் மார்க்ரம் ஆகியோர் 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியின் வெற்றியையும் உறுதி செய்தனர். 63 ரன்களில் சாம் குர்ரான் அவுட்டாக, அதே 19 வது ஓவரின் அடுத்த பந்திலேயே ஷசாங் சிங்கும் அவுட்டானார். இதனால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டாலும் கடைசி ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

-Advertisement-

சற்று முன்