- Advertisement -
Homeகிரிக்கெட்மும்பைக்கு எதிரா இந்த வித்தையை இறக்கி தான் ஜெயிச்சோம்.. அசர வெச்ச திட்டம் போட்ட குஜராத்...

மும்பைக்கு எதிரா இந்த வித்தையை இறக்கி தான் ஜெயிச்சோம்.. அசர வெச்ச திட்டம் போட்ட குஜராத் கில்..

-Advertisement-

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு முறையும் இறுதி போட்டிக்கு முன்னேறியதுடன் மட்டும் இல்லாமல் தாங்கள் அறிமுகமான முதல் சீசனில் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது. கடந்த சீசனிலும் அவர்கள் தான் கோப்பையை கைப்பற்றி இருக்க வேண்டும். ஆனால் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி வீரர் ஜடேஜா ஒரு ஃபோர் அடித்ததன் காரணமாக நூலிழையில் அந்த வாய்ப்பை குஜராத் அணி தவற விட்டிருந்தது.

இப்படி இரண்டு சீசன்களில் குஜராத் நம்பர் ஒன் அணியாக திகழ முக்கிய காரணமாக இருந்தவர் தான் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அப்படி இருந்தும் மீண்டும் தான் ஐபிஎல் தொடரில் அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட வேண்டும் என விருப்பம் தெரிவித்ததுடன் அந்த அணியில் இணைந்து தற்போது அதன் கேப்டனாகவும் செயல்பட தொடங்கி விட்டார்.

இந்த முடிவால் ரோஹித் ரசிகர்கள் ஒரு பக்கம் ஹர்திக் பாண்டியா மீது கோபத்தில் இருந்தனர். அதே போல குஜராத் ரசிகர்களும் தங்களை சிறப்பாக வழி நடத்தி பாதியில் விட்டு சென்றதால் அவர் மீது கோபத்தில் இருந்தனர். இப்படி ஹர்திக் பாண்டியாவை சுற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டியிலும் பல விஷயங்கள் பிரதிபலித்திருந்தது.

இதற்கிடையே ஹர்திக் பாதியில் திடீரென விலகியதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஆகும் வாய்ப்பு சுப்மன் கில்லிற்கு கிடைத்திருந்தது. இளம் வீரரான அவருக்கு இந்த முறை மிகப்பெரிய பொறுப்பும் அவர் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டிய சூழலும் உருவாகியது. அதனை முதல் போட்டியில் அமர்க்களமாக செய்துள்ளார் கில்.

-Advertisement-

169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, வெற்றி பெற எளிய வாய்ப்பு இருந்தும் 6 றன் வித்தியாசத்தில் அவர்கள் தோல்வி அடைந்தனர். ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் கில் உதவியுடன் சிறப்பாக பந்து வீசி குஜராத் பவுலர்கள் தங்கள் வெற்றியையும் உறுதி செய்தனர்.

தனது தலைமையில் முதல் போட்டியில் வென்ற பின் கில் பேசுகையில், “போட்டிக்கு நடுவே டியூ வந்த போதிலும் எங்களின் பந்து வீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மிக அபாரம். எங்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசிய விதமும் நாங்கள் போட்டியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தது. மும்பை மீது நெருக்கடியை உருவாக்கி அவர்கள் ஏதாவது தவறு செய்ய வேண்டும் என்று தான் திட்டம் போட்டோம்.

எங்கள் வெற்றிற்கு இந்த ரசிகர்கள் கூட்டம் ஒரு காரணம். போட்டி இரவில் இருந்தாலோ அல்லது பகலில் இருந்தாலோ அதிகமாக வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். நாங்கள் கொடுத்த இலக்கு நல்ல ரன்னாக இருந்தாலும் இன்னும் 15 ரன்கள் குறைவாக இருந்ததாக தோன்றுகிறது. கடைசி நேரத்தில் ஷார்ட் பந்துகளை அடிக்கவும் கொஞ்சம் சிரமமாக இருந்தது” என கில் கூறினார்.

-Advertisement-

சற்று முன்