- Advertisement -
Homeகிரிக்கெட்டாஸ் போடுற நேரத்துல இப்படியா உளறி வைக்கிறது??.. மாத்தி பேசி வசமா சிக்கிய சுப்மன் கில்..

டாஸ் போடுற நேரத்துல இப்படியா உளறி வைக்கிறது??.. மாத்தி பேசி வசமா சிக்கிய சுப்மன் கில்..

-Advertisement-

17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றிருந்த நிலையில், இந்த போட்டியில் ருத்துராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருந்தது. தோனி கேப்டன் பதவியில் இருந்து மாறி இருந்தாலும் ருத்துராஜ் சிறப்பாக தலைமை வகித்ததால் ரசிகர்களும் அவரது கேப்டன்சியை பாராட்டி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த ஆறு போட்டிகளில் சொந்த மண்ணில் ஆடிய அணிகள் தான் வெற்றி கண்டிருந்தது. அப்படி ஒரு நிலையில் தான், சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள், சென்னைக்கு அதிக சாதகம் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதி இருந்தனர்.

முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர்கள் நிர்ணயித்த இலக்கு எளிதாக இருந்த போதிலும் சிறப்பாக பந்து வீசி வெற்றியை தங்கள் பக்கம் திருப்பி இருந்தனர். சிஎஸ்கே அணியை போல அந்த அணியிலும் கேப்டனாக இருந்த ஹர்திக் மீண்டும் மும்பை அணியில் இணைந்து கேப்டனாக மாறி இருந்ததால் புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில்லையும் அவர்கள் நியமித்திருந்தனர்.

மும்பைக்கு எதிரான போட்டி கைவிட்டு சென்ற போதிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது பந்து வீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தி போட்டியில் வெற்றி பெற செய்திருந்தார். இப்படி இரண்டு இளம் கேப்டன்களான ருத்துராஜ் மற்றும் கில் ஆகியோர் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தான் அவர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது பலப்பரீட்சை நடத்தினர்.

-Advertisement-

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்து வீச்சைத் தேர்வு செய்ய அதன்படி ஆடிய சென்னை அணியில் ருத்துராஜ், ரச்சின் ரவீந்தரா, ஷிவம் துபே என அனைவருமே தங்களுக்கு கிடைத்த பந்துகளில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்ததால் நல்ல ஒரு ஸ்கோரையும் அவர்கள் எட்டி இருந்தனர். அதிலும் அதிகபட்சமாக ஷிவம் துபே 23 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு ஃபோர்களுடன் 51 ரன்கள் எடுத்து மிடில் ஓவர்களில் பட்டையை கிளப்பியிருந்தார்.

இதனிடையே இந்த போட்டிக்கு நடுவே நடந்த ஒரு சம்பவம் தொடர்பான செய்தி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. டாஸ் போட்ட சமயத்தில் அதனை வென்ற குஜராத் கேப்டன் கில், முதலில் பேட்டிங் என சொல்லிவிட்டு பின்னர் இல்லை இல்லை பந்து வீசுகிறோம் என ஒரே நொடியில் மாற்றி சொல்லி இருந்தார்.

டாஸ் வென்றால் பந்து வீசலாம் என முடிவு செய்திருந்த கில், ஏதோ ஒரு குழப்பத்தில் பேட்டிங் என உளற உடனடியாக சிரித்துக் கொண்டே திருத்தி சொன்ன விஷயம் தொடர்பான வீடியோ தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

-Advertisement-

சற்று முன்