- Advertisement -
Homeகிரிக்கெட்எங்ககிட்ட சரசம் பண்றதுக்குன்னே.. ஆர்சிபியோட ஹை ஸ்கோர் மட்டுமில்ல.. இந்த விஷயத்துலயும் குடைச்சல் கொடுத்த ஹைதராபாத்..

எங்ககிட்ட சரசம் பண்றதுக்குன்னே.. ஆர்சிபியோட ஹை ஸ்கோர் மட்டுமில்ல.. இந்த விஷயத்துலயும் குடைச்சல் கொடுத்த ஹைதராபாத்..

-Advertisement-

முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி பந்தில் தோல்வியை தழுவிய ஹைதராபாத் அணி மும்பை அணிக்கு எதிராக பட்டாசாய் வெடித்தது என்றே சொல்லலாம். தொடக்க வீரர்கள் தொடங்கி இந்த போட்டியில் 20 வது ஓவர் வரை ஆடிய வீரர்கள் அனைவருமே அதிரடி ஆட்டத்தை மட்டும் தான் கையில் எடுத்திருந்தனர்.

பெரும்பாலும் பவுண்டரிகள் சென்று கொண்டே இருந்ததால் டாட் பால்களும் குறைவாக தான் இருந்து வந்தது. அபிஷேக் ஷர்மா, க்ளாஸன், ஹெட் என பலரின் அதிரடியால் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தாலும் பின்னர் ஆடிய மும்பை அணியும் இலக்கை எட்டிப் பிடிப்பது போன்ற ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருந்தனர்.

ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஒரே போட்டியில் முடிந்து விடுமா என்றும் ஹைதராபாத் ரசிகர்கள் ஒரு நிமிடம் அஞ்சி போயினர். ஆனால் கடைசி ஓவர்களை ஹைதராபாத் வீரர்கள் சிறப்பாக பந்து வீசியதால் தோல்வியில் இருந்து அவர்கள் தப்பித்ததுடன் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியையும் பெற்றிருந்தனர்.

இரு அணிகளும் சேர்ந்து இந்த போட்டியில் பல சாதனைகளை உடைத்து எறிந்த நிலையில் தற்போது தொடர்ந்து ஆர்சிபி அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் ஹைதராபாத் அணி தலைவலியாக இருந்து வருவதை தற்போது காணலாம். ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக இருக்கும் ஆர்சிபி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது கிடையாது.

-Advertisement-

பலமுறை பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டியில் தகுதி பெற்ற போதிலும் ஏதோ ஒரு அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் நிற்காமல் போக அதில் தோல்வியை தழுவும் நிலையும் உருவாகி இருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் தான் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் நிர்ணயித்த 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர்கள் கோலி மற்றும் கெயில் ஆகியோர் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ஆடி இருந்தனர்.

ஆனால் அவர்கள் அவுட்டான பின்னர் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடாததால் வெறும் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி ஐபிஎல் கோப்பை வெல்லும் வாய்ப்பை தவற விட்டிருந்தனர். ஹைதராபாத் அணி வென்ற முதல் மற்றும் ஒரே ஐபிஎல் கோப்பை அதுதான் என்ற சூழலில் தற்போது ஆர்சிபி அடித்த அதிகபட்ச ஸ்கோரையும் (263 ரன்கள்) முறியடித்து அந்த அணியின் ரசிகர்களுக்கு கடும் குடைச்சலையும் மன உளைச்சலையும் கொடுத்துள்ளனர்.

அதே போல, க்ளாஸன், ஹெட் என ஹைதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அனைவருமே ஆர்சிபி அணியில் இணைந்து அடியவர்கள் தான். ஆர்சிபி கைவசம் இருந்த மிக முக்கியமான ஒரு சாதனையாக அதிகபட்ச ஸ்கோர் பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுவும் ஐபிஎல் கோப்பை என இரண்டுமே சொந்தமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டதன் முக்கிய காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்