- Advertisement -
Homeகிரிக்கெட்சன்ரைசர்ஸ் கொடுத்த இமாலய இலக்கு.. சளைக்காமல் போராடிய மும்பை.. திலக் அவுட்டானதும் மாறிய மேட்ச்..

சன்ரைசர்ஸ் கொடுத்த இமாலய இலக்கு.. சளைக்காமல் போராடிய மும்பை.. திலக் அவுட்டானதும் மாறிய மேட்ச்..

-Advertisement-

இது தான்டா ஐபிஎல் மேட்ச் என ரசிகர்கள் கடந்த மூன்று மணி நேரம் ஆர்ப்பரித்து வருவதற்கு மிக முக்கிய காரணம் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் இணைந்து அடித்த காட்டடி தான். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ் காந்தி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி இருந்தது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். ஹைதராபாத்தில் டிராவிஸ் ஹெட் இடம் பிடித்திருந்த நிலையில் அவருடன் சேர்ந்து களமிறங்கிய மயங்க் அகர்வால் 11 ரன்களில் அவுட்டாக மறுபுறம் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் ஆகியோர் இணைந்து பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர்.

18 பந்துகளில் ஹெட் அரைச்சதம் அடிக்க, ஹைதராபாத் அணிக்காக ஒரு வீரரின் அதிவேக அரைச்சதம் என்ற சிறப்பையும் பெற்றிருந்தது. ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் 16 பந்துகளிலேயே இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அரைச்சதமடித்து ஹெட்டின் சாதனையை கொஞ்ச நேரத்திலேயே காலி செய்திருந்தார். கடைசி கட்டத்தில் வந்த மார்க்ரம் மற்றும் கிளாஸன் ஆகியோரும் பட்டையை கிளப்ப சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோராக இது பதிவான நிலையில் அணியில் இருந்த அனைவருமே பவுண்டரி மழையில் ரசிகர்களை நனைய வைத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதிகபட்சமாக கிளாசன் 34 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் நான்கு ஃபோர்களுடன் 80 ரன்கள் எடுத்திருந்தார். இப்படி ஒரு இலக்கை எட்டிப் பிடிக்க தொடர்ந்து பேட்டிங் ஆடிய மும்பை அணியும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போன்ற ஆட்டத்தை தான் ஆடி இருந்தனர்.

-Advertisement-

முதல் மூன்று ஓவர்களில் அவர்கள் ஐம்பது ரன்களை தொட்ட நிலையில் அதன் பின்னர் வந்த ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி இருந்தனர். ஆனாலும் அதன் பின்னர் வந்து திலக் வர்மா மற்றும் நமன் திர் அதிரடி காட்ட, 10 ஓவர்களில் மும்பை அணியும் 141 ரன்கள் சேர்த்திருந்தது.

ஆனால் திலக் வர்மா இதன் பின்னர் அவுட்டான ஒரு சூழலில், ஒரு சில ஓவர்கள் ரன் அடிக்கவே மும்பை அணி திணறியது. கடைசி 4 ஓவர்களில் 88 ரன்கள் வேண்டுமென்ற நிலையில், டிம் டேவிட் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களை பறக்க விட்டதால் மீண்டும் போட்டியில் பரபரப்பு உருவானது.

ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில், மும்பை அணி 246 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

-Advertisement-

சற்று முன்