- Advertisement -
Homeகிரிக்கெட்வாட்டர் பாட்டில் தூக்கிட்டு வந்ததுக்கு 10 கோடியா. வசதி இருக்கலாம் அதுக்காக இப்படியா என பிரபல...

வாட்டர் பாட்டில் தூக்கிட்டு வந்ததுக்கு 10 கோடியா. வசதி இருக்கலாம் அதுக்காக இப்படியா என பிரபல ஐபிஎல் அணியை கலாய்க்கும் ரசிகர்கள்.

-Advertisement-

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த 16-ஆவது ஐபிஎல் சீசனில் பல கோடிகளுக்கு வாங்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் இந்திய இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அப்படி கோடிகளில் டிரேடிங் செய்யப்பட்டு வெளியில் அமரவைக்கப்பட்ட ஒரு வீரர் தற்போது குறித்த தகவலையே இந்த பதிவில் காண உள்ளோம்.

அந்த வகையில் கடந்த ஆண்டு குஜராத் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனை இந்த ஆண்டு கொல்கத்தா அணி 10 கோடி ரூபாய்க்கு ட்ரேடிங் முறையில் வாங்கியது. ஆனால் இப்படி பெரிய தொகைக்கு வாங்கப்பட்டாலும் அவர் கொல்கத்தா அணிக்காக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

அதிலும் அந்த 3 போட்டிகளிலும் அவர் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும்தான் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று போட்டிகளில் அவர் மோசமாக செயல்பட்டதால் அவர் பிளேயிங் லெவனில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜேசன் ராய் தொடர்ச்சியாக விளையாட வைக்கப்பட்டார்.

ஆனால் கொல்கத்தா அணியில் தொடர்ச்சியான மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆன்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரேன் ஆகியோரை தொடர்ச்சியாக விளையாட வைத்த கொல்கத்தா அணியின் நிர்வாகம் பெர்குசனுக்கு மட்டும் வாய்ப்பை வழங்காமல் விட்டுவிட்டது. இந்நிலையில் அவர் விளையாடிய இந்த ஒரு சில போட்டிகளை தவிர்த்து மீதமுள்ள போட்டிகளில் அவர் வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் கூல்ட்ரிங்ஸ் ஆகியவற்றை மட்டும் தான் கொடுத்துக் கொண்டிருந்தார்.

-Advertisement-

இதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அதாவது படுமோசமாக விளையாடிய சுனில் நரேன் மற்றும் ரசல் ஆகியோருக்கு வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்ட வேளையில் 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட பெர்குசனை வெறும் வாட்டர் பாயாக பயன்படுத்தியது ஏன்? பணம் இருக்கிறது என்பதற்காக வீரரை ஏலத்தில் எடுத்துவிட்டு பிறகு இப்படி அவரை சரியாக பயன்படுத்தாமல் விடலாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: உங்களால ஒரு மேட்ச் கூட ஜெயிக்க முடியலையே என ரோகித் சர்மாவை சீண்டிய ரிப்போர்ட்டர். ரோகித் கொடுத்த சிறப்பான விளக்கம்.

அதோடு இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும் : டிம் சவுதியை கொல்கத்தா அணி ஒரு போட்டியில் மட்டுமே பயன்படுத்தி அதன்பிறகு தொடர்ச்சியாக வெளியில் அமர வைத்தது, அதேபோன்று பெர்குசனையும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே பயன்படுத்திவிட்டு அதன் பிறகு வாட்டர் பாயாக மாற்றிவிட்டது என்று கூறினார். இப்படி அவர்களை பயன்படுத்துவதை விட மெகா ஏலத்திற்கு முன்னதாக அவர்களை அணியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்