- Advertisement -
Homeகிரிக்கெட்ஐபிஎல் சமயத்துலயே இங்கிலாந்தில விக்கெட் கீப்பிங் செய்ய தோனி எனக்கு டிப்ஸ் கொடுத்திருக்காரு. ரகசியம் பகிர்ந்த...

ஐபிஎல் சமயத்துலயே இங்கிலாந்தில விக்கெட் கீப்பிங் செய்ய தோனி எனக்கு டிப்ஸ் கொடுத்திருக்காரு. ரகசியம் பகிர்ந்த கேஎஸ் பரத்

-Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் விளையாடும் ப்ளேயிங் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

முக்கியமாக விக்கெட் கீப்பராக கே எஸ் பரத் அல்லது இஷான் கிஷான் ஆகிய இருவரில் யாரை அணியில் வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் முதல் தேர்வாக கே எஸ் பரத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணியின் விக்கெட்  கீப்பர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி, நீண்ட ஓய்வில் இருப்பதால் அவருக்கு மாற்று கீப்பராக கே எஸ் பரத் டெஸ்ட் அணியில் இடம்பெற்றார். அவரின் விக்கெட் கீப்பிங் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தாலும், இதுவரை பேட்டிங்கில் சொதப்பிதான் வருகிறார்.

இந்நிலையில் கேஎஸ் பரத் மகேந்திர சிங் தோனி, தனக்கு கொடுத்த அறிவுரை பற்றி பேசியுள்ளார். அதில் “கடந்த ஐபிஎல் தொடரின் போது நான் தோனியோடு உரையாடினேன். இங்கிலாந்தில் கீப்பிங் செய்த அனுபவங்கள் மற்றும் பொதுவாக விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட தேவையானவை பற்றி பேசினார். அதிலிருந்து நிறைய டிப்ஸ்களை நான் பெற்றேன்” என்று பாரத் கூறியுள்ளார்.

-Advertisement-

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருப்பது குறித்து “கீப்பராக இருக்க உங்களுக்கு தீர்க்கமான எண்ணமும் ஆர்வமும் தேவை. ஏனென்றால் விக்கெட் கீப்பராக இருப்பது பெரிதாக கண்டுகொள்ளப் படாத வேலை. நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு நாளில் 90 ஓவர்கள் கீப்பிங் செய்கிறீர்கள். பந்துக்கு பந்து கவனத்தைக் குவிக்க வேண்டும், எனவே சவால்களை ஏற்றுக்கொண்டு, அணிக்கு பங்களிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: நாங்கள் வெற்றியதோடு துவங்குவோம் என இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ள ஆஸி வீரர் ஸ்காட் போலண்ட்.

பரத்துக்கு போட்டியாளராக இருக்கும் இஷான்கிஷான் இன்னும் டெஸ்டில் அறிமுகமாகவில்லை. அவர் இதுவரை 48 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் பரத்தை விட பேட்டிங்கில் தான் சிறந்தவர் என நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்