- Advertisement -
Homeகிரிக்கெட்ஐபிஎல் பைனல் மட்டும் இல்ல, WTC பைனல்லையும் நாங்க தான் கெத்து என நிரூபித்த தோனியின்...

ஐபிஎல் பைனல் மட்டும் இல்ல, WTC பைனல்லையும் நாங்க தான் கெத்து என நிரூபித்த தோனியின் வளர்ப்புகள். சிஎஸ்கே-னா சும்மாவா என மார்தட்டும் ரசிகர்கள்

-Advertisement-

நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பாலோ ஆன் ஆகாமல் தப்பிக்குமா என்பதே இப்போது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித்(121)மற்றும் ட்ராவிஸ் ஹெட்(163) ஆகியோரின் அபார இன்னிங்ஸ்கள் அந்த அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்தின. இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 285 ரன்கள் சேர்த்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.

அதன் பின்னர் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்த ரோஹித் ஷர்மா, கில் ஜோடி 6 ஆவது ஓவரிலேயே பிரிந்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்த சில ஓவர்களிலேயே சுப்மன் கில் 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, புஜாரா கூட்டணியும் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. புஜாரா 14 ரன்களில் ஆட்டமிழக்க, கோலியும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 71 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

-Advertisement-

அப்போது ஜோடி சேர்ந்த அஜிங்க்யே ரஹானே மற்றும் ரவிந்தர ஜடேஜா ஜோடி நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். சிறப்பாக விளையாடிய ஜடேஜா 51 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ரஹானே 29 ரன்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்திய அணி இப்போது 5 விக்கெட்களை இழந்து 151 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

இதையும் படிக்கலாமே: ரோகித் மேல் என்ன கோவம்? கோலி மற்றும் ரவிசாஸ்திரியை புகழ்ந்து சிஎஸ்கே பதிவிட்ட ரீட்வீட் – அப்படியே அலேக்காக தட்டி தூக்கிய நெட்டிசன்கள்

சமீபத்தில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி அசத்திய இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டியிலும் அதன் தன்மை அறிந்து நிதானமாக விளையாடி அணியை மீட்டனர். அது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் “எங்க அணி வீரர்கள்னா சும்மாவா” என பெருமிதப்பட்டு சமூகவலைதளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்