அவ்ளோ தான் சோலி முடிஞ்சுது. இனிமே இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு இல்ல. ஓவர் காண்பிடண்ட்டில் பேசும் ரிக்கி பாண்டிங். பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

- Advertisement -

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தற்போது இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் போட்டி முடிந்துள்ள நிலையில் இந்திய அணி ஆபத்தான கட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும், ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களும் சேர்த்து அசத்தினர். இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய நால்வருமே தங்கள் விக்கெட்களை வெகுவிரைவில் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதனால் இந்தியா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 71 ரன்களில் தடுமாறியது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானேவும் ஜடேஜாவும் நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் ரன்களை சேர்த்தனர். 48 ரன்கள் சேர்த்த ஜடேஜா அவுட் ஆகி வெளியேற, இப்போது ரஹானேவும், விக்கெட் கீப்பர் பரத்தும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இரண்டு நாள் ஆட்ட முடிவில் ஆஸி அணியின் கையே ஓங்கியுள்ளது. இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையில் பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “இந்த நிலைமையில் இருந்து இந்திய அணியால் இந்த போட்டியை வெல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: ஐபிஎல் பைனல் மட்டும் இல்ல, WTC பைனல்லையும் நாங்க தான் கெத்து என நிரூபித்த தோனியின் வளர்ப்புகள். சிஎஸ்கே-னா சும்மாவா என மார்தட்டும் ரசிகர்கள்

ஆனால் டெஸ்ட் போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆஸி அணியிடமே இந்திய அணி பாலோ ஆன் ஆகி அதன் பின்னர் போட்டியை வென்ற வரலாறெல்லாம் நடந்துள்ளது. அதனால் இந்திய அணி இந்த நிலையில் மீண்டெழுந்து வந்து குறைந்த பட்சம் போட்டியை டிரா செய்யவாவது முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்