இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன் படி இந்திய பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சால் ஆரம்பத்தில் விக்கெட்கள் வேகமாக சரிந்தன. ஆனால் 3 விக்கெட்டிற்கு பிறகு ஸ்மித் மற்றும் ஹெட் நிதானமாக ஆடி ரன்களை குவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த போட்டியின் மூலம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆறாவது முறையாக ஐசிசி இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர். இந்த எண்ணிக்கையானது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை விட அதிகம் என்பது குறிப்பிட தக்கது. தோனி இதுவரை ஐந்து ஐசிசி இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
அதே சமயம் 41 வயதான அவர், இதுவரை மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அணிக்காக வெற்றியையும் பெற்றுத்தந்துள்ளார். அதே வேளையில் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங் தான். அவர் இதுவரை ஏழு ஐசிசி இறுதிப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
2000 முதல் 2017 வரை இந்திய அணிக்காக விளையாடிய அவர், இதுவரை 3 முறை கோப்பை வெல்லும் வாய்ப்பை பெற்ற இந்திய அணியின் ஒரு அங்கமாக இருந்துள்ளார். 2007-இல் ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011- இல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, 2013-இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இப்படி மூன்று முறை வெற்றியின் ருசியை கண்டுள்ளார்.
இதில் ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த மூன்று முறையும் யுவராஜ் சிங்க் தோனி தலைமையின் கீழ் தான் விளையாடி உள்ளார். அதே வேலையில் இதற்க்கு முன்பு கோலி கேப்டனாக இருந்த போது சாம்பியன்ஸ் டிராபி 2017 மற்றும் WTC 2021 இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: வீடியோ: 141 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து. பேட்டை உதறிவிட்டு அப்படியே நிலைகுலைந்த லாபுஷேன்.
இந்த நிலையில் தான் WTC 3 இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் கீழ் இந்திய அணி விளையாடி வருகிறது. சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூட வெற்றி தோல்வி குறித்த கேள்வி ரோகித் ஷர்மாவிடம் கேட்டபோது, இதுவரை நடந்தவற்றை பற்றி யோசிக்க வேண்டியதில்லை. இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற முயற்சிப்போம் என்று அவர் அதற்க்கு பதிலாக கூறி இருந்தார்.