- Advertisement -
Homeகிரிக்கெட்ரோகித் சர்மா இதுலையே தன்னோட பயத்த கண்ல காட்டிட்டாரு. இந்திய வீரர்கள் இப்படி இருக்கும்போது, இந்த...

ரோகித் சர்மா இதுலையே தன்னோட பயத்த கண்ல காட்டிட்டாரு. இந்திய வீரர்கள் இப்படி இருக்கும்போது, இந்த தவற நிச்சயம் அவர் செஞ்சிருக்க கூடாது – விளாசும் முன்னாள் இந்திய வீரர்

-Advertisement-

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியானது நேற்று இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று துவங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். ஆனால் இப்படி ரோகித் சர்மா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து போன்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் டாஸ் வெல்லும் பெரும்பாலான அணிகள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.

அப்படி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்துவிட்டு பின்னர் கண்டிஷனுக்கு ஏற்றார் போல் பந்துவீச்சில் அட்டாக் செய்வார்கள். ஆனால் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று இந்திய அணி சிறப்பான பேட்டிங் லைன் அப்பை வைத்துக்கொண்டு இப்படி ஏன் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்விகளும் அதிக அளவில் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஃபரூக் இன்ஜினியர் டாஸ் வென்று ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் டாஸ் வென்றதுமே ரோகித் சர்மா முதலில் நாங்கள் பந்து வீசுகிறோம் என்று கூறியது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இந்த மைதானம் மிகவும் பச்சையாக இருப்பதால் பேட்டிங் செய்வதற்கு அவர் தயங்கினாரோ என்று தோன்றுகிறது.

-Advertisement-

அதனால் தான் முதலில் அவர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் நினைக்கிறேன். நம்மிடம் இருக்கும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருந்தாலும் இது புத்திசாலித்தனமான முடிவா என்பதை பொறுத்திருந்துதான் காண முடியும். தற்போது இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக புஜாரா கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி நல்ல பார்மில் இருக்கிறார்.

இதையும் படிக்கலாமே: இந்தியாவுக்கு வந்து உலகக்கோப்பை தொடர்ல விளையாட நாங்க தயார். ஆனா ஒரு கண்டீஷன். இந்த ஸ்டேடியத்துல போட்டிகள நடத்தக் கூடாது – பாக். கிரிக்கெட் வாரியம் வைத்த ட்விஸ்ட்

அதேபோன்று விராட் கோலி அற்புதமான பார்மில் இருக்கிறார். மேலும் இளம் வீரரான சுப்மன் கில் தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கிறார். இப்படி அனைத்து வீரர்களுமே நல்ல பேட்டிங் பார்மில் இருக்கும்போது நிச்சயம் முதலில் பேட்டிங் செய்து அதன் பின்னர் பந்துவீச்சில் அட்டாக் செய்திருக்கலாம் இந்த ஒரு விடயத்தில் ரோகித் தவறு செய்து விட்டாரோ என்று உணர்வதாக ஃபரூக் இன்ஜினியர் குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்