ஐபிஎல் முடிந்த கையோடு வேறு ஒரு அணியால் நேரடியாக வாங்கப்பட்ட ருத்துராஜ். அதுவும் எவ்வளவு தொகை இருக்கலாம் தெரியுமா? பண மழை தான் போங்க.

- Advertisement -

ஐபிஎல் போட்டித் தொடர் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல நாடுகளில் இதுபோல லீக் போட்டிகள் நடந்தாலும் ஐபிஎல் அளவுக்கு எந்த தொடராலும் சாதிக்க முடியவில்லை. பணமழை கொட்டும் கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் தொடரே தலையாயது என்றால் அது மிகையாகாது.

இந்த நிலையில் ஐபிஎல் போலவே இப்போது மினி பிரிமீயர் லீக் போட்டிகள் இந்தியாவுக்குள்ளாக நடக்க ஆரம்பித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டுமுதல் மகாராஷ்டியா பிரிமீயர் லீக் போட்டிகள் நடக்க உள்ளன. MPL லீக் போட்டிகள் டிடி ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இது ஒளிபரப்பாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதற்கான அணிகள் அறிவிப்பு மற்றும் வீரர்கள் ஏலம் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் 57.80 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது. ஜூன் 12 ஆம் தேதி முதல் MPL லீக் போட்டிகளில் மொத்தம் 6 அணிகள் இடம்பெறுகின்றன. இந்த தொடரில் புனே அணிக்குக் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். MPL லீக்கை பொறுத்தவரையில் இவர் ஒரு ஐகான் பிளேயர். ஆகையால் இவர் நேரடியாக அந்த அணியால் எடுக்கப்பட்டார். புனே அணியின் டீம் பிரைஸ்சாக 14.80 கோடி உள்ளது. ஆகையால் அதில் ருதுராஜிற்கு 20 முதல் 50 லட்சம் வரையோ அல்லது அதற்கு மேல் கூட கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரின் விலை என்ன என்பதை வெளியிடவில்லை.

உள்ளூர் கிரிக்கெட் லீக் ஒன்றில் இவ்வளவு பெரிய தொகைக்கு இன்னும் இந்திய அணிக்காக பெரியளவில் போட்டிகள் விளையாடாத வீரர் ஒருவர் ஒரு அணியால் வாங்கப்பட்டு இருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. ருத்துராஜ் கெய்க்வாட் கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

சிஎஸ்கேவில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ருத்துராஜ் தொடர்ந்து சீரான பேட்டிங் பர்பாமன்ஸ்களைக் கொடுத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அந்த அணிக்காக அதிக ரன்கள் சேர்க்கும் வீரராக உள்ளார். இதனால் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே: ஒடிசா ரயில் விபத்து நிவாரணத்திற்காக இத்தனை கோடிகளை அள்ளிக்கொடுத்தாரா தோனி? யுவேந்திர சகல் கொடுத்தது எவ்வளவு?

தோனி ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறும் பட்சத்தில் சிஎஸ்கே அணியில் அடுத்த கேப்டனுக்கான பட்டியலில் ருத்துராஜும் முக்கிய இடம்பெறுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் புனே அணிக்காக அவர் மிகப்பெரிய தொகையில் ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாட உள்ளார்.

- Advertisement -

சற்று முன்