- Advertisement -
Homeகிரிக்கெட்தோனி நெனச்சிருந்தா இந்தியாவுக்காக இத செஞ்சிருக்கலாம். ஒரு கட்டத்திற்கு பிறகு கம்பாக் கொடுக்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம்...

தோனி நெனச்சிருந்தா இந்தியாவுக்காக இத செஞ்சிருக்கலாம். ஒரு கட்டத்திற்கு பிறகு கம்பாக் கொடுக்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம் – வாசிம் அக்ரம் பேச்சு

-Advertisement-

சர்வதேச போட்டிகளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோனி ஓய்வை அறிவித்து விட்டாலும், இன்னமும் அவர் மீதான கிரேஸ் கிரிக்கெட் ரசிகர்களுக்கோ, கிரிக்கெட் விமர்சகர்களுக்கோ குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அடிக்கடி தோனி பற்றிய பேச்சுகளும், விவாதங்களும் ஊடகங்களில் நடந்துகொண்டுதான் உள்ளன.

சமீபத்தில் தான் தலைமையேற்று வழிநடத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்தாவது முறையாக கோப்பையை வெலல் வைத்தார் தோனி. தற்போது 41 வயதாகும் தோனி, இந்த முறை முழங்கால் காயம் காரணமாக பேட்டிங்கில் கடைசியாக இறங்கி சில பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். ஐபிஎல் முடிந்ததும் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள அவர், அடுத்த சீசனிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் தோனி 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார். அதன் பிறகு ஒரு ஆண்டு எந்த போட்டியிலும் விளையாடாத அவர் 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் போட்டிகளில் 2014 ஆம் ஆண்டே ஓய்வு பெற்றார்.

இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடும் அவர் பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான் பவுலர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ள கருத்து ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அவர் ஒரு ஊடக விவாதத்தில் தோனி நினைத்திருந்தால் இப்போது கூட இந்தியாவுக்காக விளையாடி இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

-Advertisement-

இது சம்மந்தமாக அவர் கூறுகையில் “ தோனி நினைத்திருந்தால் இந்தியாவுக்காக அவர் இன்னும் விளையாடியிருக்கலாம். ஆனால் அவர் தனது ஓய்வை சரியான நேரத்தில் அறிவித்தார். அதனால் தான் தோனி தோனியாக இருக்கிறார். அவர் அடுத்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல்-இல் விளையாட வலுவாக வருவார். அவரிடம் அனுபவமும் அமைதியும் அதே சமயம் உடற்தகுதியும் உள்ளது.

இதை எல்லாம் கடந்து அவரிடம், விளையாடவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஒரு வீரருக்கு அது தான் முக்கியம். எவ்வளவு பிட்டாக இருந்தும் விளையாட்டின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தால் சிறப்பாக விளையாடுவது கடினம். ஐபிஎல் தொடரில் எந்தவொரு போட்டியிலும் ஓய்வெடுக்க மைதானத்தை விட்டு அவர் வெளியே செல்லவில்லை இதில் இருந்து அவரது உடற்தகுதியை நாம் அறியலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த ஐபிஎல்-ல் தோனி நான்பேட்டிங் கேப்டனாக செயல்பட்டதற்கான தந்திரம் இது தான். ஆர்.சி.பி-யோடு ஒப்பிட்டு தோனியின் சிறப்பை புரியவைத்த கிரிக்கெட் நிபுணர் பிரசன்னா அகோரம்

ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு கம்பேக் கொடுப்பதென்பது அவ்வளவு எளிதான ஒரு விடயம் கிடையாது. ஆனால் தோனியை நான் அறிந்த வரையில், அவர் விளையாட வேண்டும் என்று நினைத்தல் அதற்கான பயிற்சிகளை எடுத்து அவர் நிச்சயம் விளையாடுவார். கிரிக்கெட்டை பொறுத்தவரை பயிற்சி என்பது மிக முக்கியம். அவர் என்ன செய்துகொண்டிருக்கார் என்பது அவருக்கு நிச்சயம் தெரியும் எனக் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்